ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாகுபலி-2 வை தொடர்ந்து இந்திய சினிமாவை பிரம்பிக்க வைக்க போகும் மற்றொரு படம் 2.O. ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, ஒருபுறம் டப்பிங், இசை கோர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளும், மற்றொருபுறம் கிராபிக்ஸ் தொடர்பான வேலைகளும் நடந்து வருகின்றன. லைக்கா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை மும்பையில் பிரமாண்டமாக நடத்தினர். அடுத்தப்படியாக இசை வெளியீடு அக்டோபர் மாதம் துபாயில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி பிறந்தநாளையொட்டி, அன்றைய தினம் 2.O படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2.O படம், 2018-ம் ஆண்டு ஜன., 25-ம் தேதி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 15 மொழிகளில் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.