போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வனமகன் படத்தின் நாயகி சாயீஷாவின் அபார நடனத் திறமையால், அவருக்கு பாராட்டுகள் குவிவது ஒரு பக்கம் இருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தவறவிட்ட வெற்றியை, தமிழிலும் தவறவிடக் கூடாது என்பதில், கவனமாக இருக்கிறார்.
இந்த படத்தில், அவருக்கு, அதிக வசனங்கள் உள்ளதாம். ஹீரோ, ஜெயம் ரவிக்கு வசனமே இல்லை என்பது, படத்தின் மற்றொரு சிறப்பம்சம். சாயீஷாவுக்கு பலரும் பாராட்டு தெரிவிப்பதை பார்த்து, அவருக்கு வாய்ப்புகள் குவியத் துவங்கி உள்ளன.
கறுப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை தொடர்ந்து, மேலும் மூன்று தமிழ் படங்களிலும் நடிப்பது குறித்து, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் பேச்சு நடத்தி வருகிறாராம் சாயீஷா.