இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
சென்னை: ரஜினி நடித்து வரும், காலா படத்தை தயாரிப்பதற்கு, தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க, ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித்துக்கு ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, போரூரை சேர்ந்த, கே.ராஜசேகரன் தாக்கல் செய்த மனு: ரஜினி நடிக்கும், காலா என்ற கரிகாலன் படப்பிடிப்பு, மும்பையில் நடக்கிறது; படத்தை, ரஞ்சித் இயக்குகிறார். படத்தின் மூலக்கரு மற்றும் கதை குறித்து, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளேன். 1996ல், இயக்குனர் ரவிக்குமார் மூலம், கரிகாலன் மற்றும் உடன்பிறவாத தங்கச்சி ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன்.கரிகாலன் கதையின் கரு மற்றும் தலைப்பு அனைத்தும், என் படைப்பு. என் படைப்பை, நடிகர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மற்றொரு வடிவில், படமாக தயாரிக்கின்றனர். எனவே, கரிகாலன் என்ற தலைப்பையும், கதையையும் பயன்படுத்த, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிலளிக்கும்படி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, ரஞ்சித், ரஜினி ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ரஜினி, இயக்குனர் ரஞ்சித் மற்றும் பட தயாரிப்பாளர் தனுஷ் ஆகியோருக்கு ஒருவார கால அவகாசம் அளித்து பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.