தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தமிழ்த் திரையுலகத்தையே சில மாதங்களுக்கு முன் ஆட்டிப் படைத்த பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா. அவருடைய டிவிட்டர் தளத்திலிருந்து பல விதமான செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து அதிர வைத்தன. அடுத்து சில வீடியோக்களையும் வெளியிடப் போவதாக அதில் தகவல் வந்தது. அதில் அமலா பால் வீடியோ ஒன்றையும் வெளியிடப் போவதாக தகவல் வந்தது. ஆனால், அதற்குள் தன்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ 'ஹேக்' செய்துவிட்டதாகச் சொல்லி அந்தக் கணக்கையே மூடினார் சுசித்ரா. அதற்கு திரை மறைவில் சில பல வேலைகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சுசி லீக்ஸில் வெளியாக உள்ளதாகச் சொல்லப்பட்ட தன்னுடைய வீடியோ ஒன்றைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்ததாக அமலா பால் தெரிவித்துள்ளார். அது என்ன வீடியோ என்று பார்க்க காத்திருந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே அதில் வெளியான சில வீடியோக்களை அமலா பால் பார்த்திருந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டார். பார்த்தாரோ இல்லையோ தெரியாது ஆனாலும் அமலா பாலுக்கு தன் மீது அதீத நம்பிக்கை.