பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் படம் வில்லன். இந்த படத்தில் மஞ்சுவாரியர், ராசிகண்ணா, விஷால், ஹன்சிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் மாடர்ன் வேடங்களில் அதிகமாக நடித்துள்ள ஹன்சிகா இந்த படத்தில் ஹோம்லியான வேடத்தில் கடந்த வாரத்தில் இருந்து நடித்து வருகிறார். மேலும், ஜூலை 21-ந்தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரவு பகலாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சில தினங்களாக சுறுசுறுப்பாக நடித்து வந்த ஹன்சிகா, நேற்று கடும் காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறார். ஆனபோதும் ஸ்பாட்டை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார். இதையடுத்து, வில்லன் படப்பிடிப்பு தளத்திற்கு மருத்துவர் வரவழைக்கப்பட்டு அங்கேயே ஹன்சிகாவுக்கு சிகிச்சை கொடுத்துள்ளனர். இதை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள ஹன்சிகா, படப்பிடிப்பு தளத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த அனை வருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.