‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
1975ம் ஆண்டு வெளிவந்த படம் நினைத்ததை முடிப்பவன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், லதா, நம்பியார், மஞ்சுளா, சாரதா, தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். ப.நீலகண்டன் இயக்கி இருந்தார். ஓரியண்டல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான படம். பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த..., கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...., ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து..., உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம். இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி, 7.1 சவுண்ட் டிராக்கில், சினிமா ஸ்கோப் வடிவில் வெளியிட இருக்கிறார்கள். குவாலிட்டி சினிமா நிறுவனத்தின் சார்பில் பி.மணி, பி.கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.