Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலா கதை, தலைப்பு என்னுடையது : பஞ்சாயத்து ஆரம்பம்

30 மே, 2017 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Kaala-movie-under-problem

காலா படத்தின் தலைப்பு மற்றும் மூலக்கதை என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.


சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் கதை திருட்டு மற்றும் தலைப்பு தொடர்பான பஞ்சாயத்துகள் அதிகமாகி வருகின்றன. இதில் பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள் என்று எல்லாம் கிடையாது. சூப்பர் ஸ்டார் முதல் அறிமுக நடிகர்களின் படங்கள் வரை இந்த பஞ்சாயத்துகள் இருக்கின்றன. தற்போது பஞ்சாயத்து எழுந்திருப்பது நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு...


கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். படத்திற்கு காலா என்று பெயர் வைத்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று தான் படத்தின் ஷூட்டிங் மும்பையில் ஆரம்பமானது. படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மும்பையில் வாழும் நெல்லையை சார்ந்த தாதா ஒருவரின் கதை என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜசேகர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், "1996-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையில் "கரிகாலன்" என்ற தலைப்பை பதிவு செய்துள்ளேன். கரிகால சோழனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, அவர் செய்த அறச்செயல் மற்றும் வீரச்செயல்களை கொண்டு ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்து வருகிறது.


1995, 96-களில் அன்றைய ரஜினி ரசிகர்மன்ற தலைவர் சத்யநாராயணனிடம் உதவியுடன் ரஜினியின் இல்லத்திற்கு சென்று கரிகாலன் கதை தொடர்பாக சந்திக்க சென்றேன். ஆனால் அவர் பிறகு பேசலாம் என்று சொல்லிவிட்டு போட்டோ மட்டும் எடுத்து கொண்டார். மேலும் எனது கரிகாலன் படத்தின் தலைப்பை கே.எஸ்.ரவிக்குமார் மூலமாக "மயிலே குயிலே" பட ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிட்டேன்.


ஏற்கனவே சில்வர் லைன் பிலிம் நிறுவனம், நடிகர் விக்ரமை வைத்து "கரிகாலன்" என்ற படத்தை ஆரம்பித்தார்கள். இதுதொடர்பாக கோர்ட் வரை சென்று அந்த படத்திற்கு தடை உத்தரவு வாங்கினேன். தொடர்ந்து எனது கரிகாலன் படத்தை பல தயாரிப்பு நிறுவனங்களிடம் சென்று சொல்லி வந்தேன்.


இந்நிலையில், தற்போது ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் "காலா கரிகாலன்" என்ற படம் உருவாகி வருகிறது. இதுகுறித்த செய்திகளை பத்திரிகை வாயிலாக தெரிந்து கொண்டேன். இதை கண்டு நான் மிகுந்த அதிர்ச்சியடைந்ததுடன், தீராத மன உளைச்சலுக்கும் ஆளானேன். என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும், கதையின் மூலகருவினையும் திருடி "கரிகாலன்" என்ற என்னுடைய தலைப்பை "காலா கரிகாலன்" என்று மாற்றி படம் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.


இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன்நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Shree Ramachandran - chennai,இந்தியா
30 மே, 2017 - 21:18 Report Abuse
Shree Ramachandran கரிகாலன் என்று தானே சொல்லப்பட்டுள்ளது. கரிகாலச்சோழன் அல்லவே. இதையே ஆதித்ய கரிகாலன் என்று பெயர் சூட்டினால் இந்த பணம் கறக்க நினைக்கும் பண்டாரம் என்ன செய்வான்.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
30 மே, 2017 - 19:17 Report Abuse
Vaal Payyan முன்பெல்லாம் சமூக வலைத்தளங்கள்.. இன்டர்நெட், கம்ப்யூட்டர் இதெல்லாம் இல்லை, ஜரூரா திருடுனாங்க யாருக்கும் தெரியல்ல, இப்போ உலகமே உள்ளங்கையில் போன் இருக்கு, கூகுள் இருக்கு அதான் முழிக்குறாங்க, யு ட்யூப்ல சர்ச் பண்ணீங்கன்னா எவ்ளோ ஈ அடிச்சான் காப்பிய கண்டு பிடிக்க முடியும் தெரியுமா
Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
30 மே, 2017 - 19:14 Report Abuse
K.Sugavanam இவங்களை இப்போ ஒன்னும் பண்ண முடியாது. அரசியல் பின்புலம் வேறு பலமாக உள்ளது.
Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
30 மே, 2017 - 19:10 Report Abuse
K.Sugavanam ஒரிஜினலா சிந்திக்க இயலாத கூட்டம்.. பேருதான் பெரிய பேர்...தூ..
Rate this:
30 மே, 2017 - 18:25 Report Abuse
vjMalaysia kallanu vaikurathuku pathil pulanu vaigadaa vekkam kettavain gala
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in