இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
ஒவ்வொரு நாளும் புதிய சாதனையில் நுழைந்து கொண்டிருக்கிறது 'பாகுபலி 2'. பத்து நாட்களுக்குள்ளாக 1000 கோடி ரூபாயை வசூலித்து மாபெரும் சாதனை படைத்து, தொடர்ந்து பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் தற்போது 1450 கோடியை இந்தப் படம் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் 1500 கோடியைக் கடந்து விட வாய்ப்புள்ளது. மே மாதம் முழுவதும் இன்னும் பல தியேட்டர்களில் இப்படம் ஓடும் பட்சத்தில் 1700 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள்.
ஹிந்தியில் தனிப்பட்டு 500 கோடி ரூபாயைத் தாண்டி புதிய சாதனை படைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இன்னும் சீனா உள்ளிட்ட சில உலக நாடுகளில் இப்படம் வெளியாகவில்லை. வருடக் கடைசியில் வெளியாக உள்ளது. அந்த வசூலைச் சேர்த்தாலும் இல்லை அதற்கு முன்னதாகவே கூட 2000 கோடி ரூபாய் வசூலைப் பெறுவதும் சாத்தியம்தான் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் அனைத்து மொழி சாட்டிலைட் உரிமை, மற்ற டிஜிட்டல் உரிமைகள் அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் 'பாகுபலி 2' படத்தின் உருவாக்கச் செலவு போக மற்ற வகைகளில் வரவே 2000 கோடியைத் தொடலாம்.