தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
விஜய்யுடன் கத்தி, தெறி படங்களில் நடித்தவர் சமந்தா. அந்த இரண்டு படங்களிலுமே அவர்களது ஜோடி பொருத்தம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 61வது படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார் சமந்தா. இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய் ஒரு வேடத்தில் மேஜிக்மேனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கயிருக்கிறார்.
மேலும், விஜய் 61வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தபோது அவருடன் நித்யாமேனன் நடித்தார். அதன்பிறகு ஐரோப்பா சென்றபோது டாக்டர் வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்க சென்றார். தற்போது அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் விரைவில் யூனிட் இந்தியா திரும்புகிறது.
அதையடுத்து மேஜிக்மேன் விஜய் - சமந்தா நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாகிறது. இதற்கு முன்பு அவர்கள் நடித்த படங்களைப் போன்று இந்த படத்திலும் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம். நாக சைதன்யாவுடன் தனது திருமணம் முடிவான நிலையில், சில படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சமந்தா, விஜய் படத்தைப் பொறுத்த வரை எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல், அட்லியின் ஸ்கிரிப்ட்படியே நடிப்பதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறாராம்.