‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஏஏஏ என்கிற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் நீளம் மற்றும் பட்ஜெட் எகிறியதால், அந்தப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 23-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் ஏஏஏ படத்தின் ஆடியோ வெளியீடு குறித்தும் அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஏஏஏ படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருப்பதை உறுதி செய்துள்ளதோடு, விரைவில் பாடல்களும் வெளியாகவிருக்கிறது என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் வெளியீடாக 'ஏஏஏ' படத்தின் இரண்டாம் பாகத்தை கொண்டு வர தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளாராம்.
முதல் பாகத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் அஸ்வின் தாத்தா கேரக்டரை மையப்படுத்தி தற்போது விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். படக்குழுவினர் இப்போது முதல் பாகத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகின்றனர்.