இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், ஹிந்தி நடிகை கஜோல் மற்றும் பலர் நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்த தகவலை தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் , ரஜினிகாந்த் நடித்த மோஷன் கேப்சரிங் படமான 'கோச்சடையான்' படத்தை இயக்கியவர். அந்தப் படம் ரசிகர்களைப் பொறுத்தவரையில், ஏறக்குறைய ஒரு அனிமேஷன் படம்தான். ஆனால், நட்சத்திரங்கள் நடிக்க சௌந்தர்யா இயக்கி வரும் முதல் படம் என 'விஐபி 2' படத்தைச் சொல்லலாம்.
இந்தப் படத்தில் 'மின்சார கனவு' படத்திற்குப் பிறகு கஜோல் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். மிகவும் குறுகிய காலத்தில் இந்தப் படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தனுஷ் இயக்கி, சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'ப பாண்டி' படம் 25 நாளைக் கடந்துள்ள நிலையில் அவர் முழுவதும் நாயகனாக நடித்துள்ள 'விஐபி 2' படத்தின் வெளியீட்டுத் தேதிக்காக தனுஷ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.