பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் என்றபோதும், அவரது தீவிரமான ரசிகரும்கூட. அதன்காரணமாக ரஜினி ரசிகர்களைப்போன்று அவரைப்பற்றி பேசும்போது தலைவர் என்றுதான் ரஜினியை சொல்வார் தனுஷ். மேலும், ரஞ்சித் இயக்கிய கபாலி படம் தன்னை அதிகம் கவர்ந்ததால் மீண்டும் ரஜினியை வைத்து ரஞ்சித் ஒரு படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த தனுஷ், தனது வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் ரஜினியை வைத்து இன்னொரு படம் இயக்குமாறு ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், அது தனுஷின் விருப்பமாக இருந்ததால் அதற்கு ரஜினியும் மறுப்பு சொல்லவில்லை. விளைவு, தற்போது ஷங்கரின் 2.ஓ படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில் அந்த படத்தில் தனுசும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தனுஷ் விடுத்துள்ள செய்தியில், சூப்பர் ஸ்டாருடன் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. கடவுள் நினைத்தால் கண்டிப்பாக அவருடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.