ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நேரம் படத்துக்கு பின், மலையாள நடிகர் நிவின் பாலிக்கு,
கோலிவுட்டிலும் மவுசு அதிகமாகிவிட்டது. அவர் நடித்த பல
மலையாள படங்கள், இங்கு நன்றாக கல்லா கட்டுவதால், கோலிவுட் தயாரிப்பாளர்கள் பலரும், அவரை தமிழில் நடிக்க வைக்க ஆர்வமாக உள்ளனர்.
தற்போது, ரிச்சி என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார் நிவின் பாலி. இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறுகிய காலத்திலேயே, இந்த டீசரை, ஏழு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும், துாத்துக்குடி, மணப்பாடு ஆகிய இடங்களில் தான் படமாகி உள்ளது. நிவின் பாலிக்கு, தமிழ் ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, தமிழ் பட தயாரிப்பாளர்கள் பலரும், நிவின் பாலியை நோக்கி, படையெடுத்து வருகின்றனர்.