ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் மனோஜ்க்கு ஜோடியாக நடித்தவர் ரியாசென். அந்த படத்தில் மச்சக்கன்னி என்ற கேரக்டரில் நடித்து இளசுகளை கவர்ந்த அவர், பின்னர் பிரசாந்த் நடித்த குட்லக் மற்றும் அரசாட்சி ஆகிய படங்களில் நடித்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்றாலும், இந்தி, பெங்காலி மொழிப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக ரியாசென்னின் மார்க்கெட் அங்கும் டல்லடித்துள்ளது.
அதனால், தனது பெயரளவில் பரபரப்பை கூட்ட வட இந்தியாவிலுள்ள பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவது போன்று ரியாசென்னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சிலதினங்களுக்கு முன்னர் ஒரு போட்டோவை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரியா சென். அதில் மேலாடை எதுவும் இன்றி பின்புறமாக போஸ் கொடுத்திருக்கிறார். இதனால் வடஇந்தியா மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களின் கவனத்துக்கும் வந்துள்ளார் ரியாசென்.