‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'பாகுபலி 2' திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் கடந்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. படம் திட்டமிட்டபடி அன்று வெளியாகுமா என்று பல சர்ச்சைகள் எழுந்தாலும் படம் காலை காட்சிக்கே வெளியாகிவிட்டது. சிறப்புக் காட்சிகள் மட்டுமே ரத்தனாது. படத்தின் முதல் காட்சியிலிருந்தே படம் பற்றிய 'பாசிட்டிவ்' ஆன தகவல்கள், செய்திகள் பரவியதால் படம் தமிழ்நாட்டிலும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. இங்கும் வசூல் 100 கோடியைக் கடக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வரும் ஞாயிறு வரை பல தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வரும் வெள்ளியன்று 5ம் தேதி வெளியாவதாகச் சொல்லப்பட்ட 'எய்தவன், தொண்டன்' ஆகிய படங்கள் அதற்கடுத்த வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. ரசிகர்களை 'பாகுபலி 2' ஜுரம் பிடித்துள்ளதால் மற்ற படங்களுக்கு அவர்கள் வருவார்களா என்ற சந்தேகம் திரையுலகினரிடையே எழுந்துள்ளது.
இருந்தாலும் வரும் 5ம் தேதியன்று தன்ஷிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்க அம்மா ராணி', மற்றும் 'ஆரம்பமே அட்டகாசம், மதிப்பெண்', விளையாட வா ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன.
அதற்கடுத்த ஒரு வாரத்திற்குள் எப்படியும் 'பாகுபலி 2' ஜுரம் குறையலாம் என்ற எதிர்பார்ப்பில் மே 12ம் தேதியன்று “உள்குத்து, எய்தவன், சரவணன் இருக்க பயமேன், திறப்பு விழா”, ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 'தொண்டன்' படமும் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 2' படத்திற்கு வரவேற்பு அப்போதும் எப்படி தொடர்கிறது என்பதைப் பொறுத்து மே 12 அன்று வெளியாவதாகச் சொல்லப்படும் படங்களிலும் மாற்றங்கள் வரலாம்.
மே 19க்குப் பிறகே மற்ற பெரிய படங்கள் வரலாம்.