‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியில் அமீர்கான் நடித்த படம் 3 இடியட்ஸ். இந்த படத்தைத்தான் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஷங்கர். அப்படத்தில் விஜய் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் இலியானா, ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் என்பவர் எழுதிய பைவ் பாய்ண்ட் சம் ஒன் என்ற நாவல் தான் 3 இடியட்ஸ் படமாக உருவாகியிருந்தது.
இந்நிலையில், பைவ் பாய்ண்ட் சம் ஒன் என்ற அந்த நாவலை தற்போது டில்லி பல்கலைக்கழகத்தில் இலக்கிய படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
பைவ் பாய்ண்ட் சம் ஒன் என்ற நாவல் தொடர்ந்து சேத்தன் பகத் எழுதிய ஆப் கேர்ள்பிரண்ட் என்ற நாவலும், இதே பெயரில் இந்தியில் படமாகியிருக்கிறது. அர்ஜூன்கபூர், ஸ்ரத்தா கபூர் ஆகியோர் நடித்துள்ள அப்படம் வருகிற மே 19-ந்தேதி திரைக்கு வருகிறது.