‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி மீது விஜய் சேதுபதிக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அவர் எப்போது அழைத்தாலும் கதையோ, சம்பளமோ கேட்காமல் நடிக்க கிளம்பி போய்விடுவேன். என்பார் விஜய் சேதுபதி.
தென்மேற்கு பருக்காற்று படத்திற்கு பிறகு லிங்குசாமி தயாரிப்பில் இடம் பொருள் ஏவல் படத்தில் இருவரும் இணைந்தார்கள். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தர்மதுரை படத்தில் இணைந்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றது, தெற்மேற்கு பருக்காற்று படத்தில் சரண்யாவுக்கும், வைரமுத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. தர்மதுரை படத்திற்கு வைரமுத்துவிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. விஜய் சேதுபதிக்கு தேசிய விருது பெற்றுத் தரவேண்டும் என்ற நோக்கில் அதற்கென்றே பக்கவான ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்திருக்கிறாராம் சீனு ராமசாமி. படத்தின் தலைப்பு மாமனிதன் என்று வைத்திருக்கிறார்கள். இதில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜாவே தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஜூலை மாதம் தொடங்கும் என்று தெரிகிறது