‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'பாகுபலி 2' படம் திரைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. உலகம் முழுவதும் சுமார் 6000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 1050 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்களாம். இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் சுமார் 900 தியேட்டர்களிலும், கனடாவில் சுமார் 150 தியேட்டர்களிலும் படத்தை வெளியிட உள்ளார்களாம்.
அமெரிக்காவில் மட்டும் 'பாகுபலி 2'வின் தெலுங்குப் படம் சுமார் 400 தியேட்டர்களிலும், ஹிந்திப் படம் சுமார் 300 தியேட்டர்களிலும், தமிழ்ப் படம் சுமார் 200 தியேட்டர்களிலும் சுமார் 700 இடங்களில் வெளியாக உள்ளது. கனடாவில் 80 இடங்களில் சுமார் 150 தியேட்டர்கள் வரை படத்தை வெளியிட உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பிரமிக்க வைக்கும் 'ஐமேக்ஸ்' வடிவில் சுமார் 40 இடங்களில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ஏப்ரல் 27ம் தேதி பல ஊர்களில் படத்தின் சிறப்பு பிரிவியூ காட்சிகளை நடத்த உள்ளார்கள். அதற்கான முன்பதிவு 21ம் தேதியே ஆரம்பமாக உள்ளதாம். அமெரிக்காவில் மட்டும் 'பாகுபலி 2' படம் பல கோடி ரூபாயை வசூல் செய்யும் என்கிறார்கள்.