ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி, மடோனா செபாஸ்டின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப.பாண்டி. தனுஷ் முதன்முறையாக இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக வெளியாகவுள்ளது. தன்னுடைய அலுவலகத்தில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில், ப.பாண்டி படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டியுள்ளார் தனுஷ்.
முழுப்படத்தையும் பார்த்துவிட்டு தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி, "இன்னும் 10 வருஷத்துக்கு வேறு படத்தை இயக்காதீர்கள். இந்தப் படமே பல வருடங்கள் உங்கள் பேரைச் சொல்லும்” என்று சொன்னாராம். அது மட்டுமல்ல, தன்னுடைய நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை சென்னைக்கு அழைத்து ப.பாண்டி படத்தை பார்க்க வைத்திருக்கிறார் ரஜினி.
படத்தைப் பார்த்து மிரண்டுபோன மோகன்பாபுவிடம், ப.பாண்டி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும்படி சொன்னாராம் ரஜினி. அவரது விருப்பத்தின்படி ப.பாண்டி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு நடிக்கிறார். இந்தப் படத்தை சுப்பிரமணியசிவா இயக்க இருப்பதாக தகவல்.