‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வித்தியாசமான படங்களில் நடித்தால் தான், இன்னும் கொஞ்ச நாள் தாக்குப்பிடிக்க முடியும் என, தெரிந்து விட்டது, த்ரிஷாவுக்கு. துாங்காவனம் படத்தில், கமல்ஹாசனுடன் சண்டை போடும் ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த அவர், தற்போது, கர்ஜனை என்ற படத்திலும், செமத்தியான ஆக் ஷன் ரோலில் நடித்துள்ளாராம். இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை, படமாக்கி, விற்பனை செய்யும் கும்பலை வெளுத்து வாங்கும் வேடத்தில் நடித்துள்ளாராம் த்ரிஷா. இந்த படத்துக்காக, முறைப்படி சண்டை பயிற்சி பெற்ற அவர், படப்பிடிப்பின் போது, அபாயகரமான காட்சிகளில் டூப் போடாமல், அவரே நடித்து, படக் குழுவினரிடம் சபாஷ் வாங்கினாராம். தொடர்ந்து, இது போன்ற அதிரடி வேடங்களில் நடித்து, விஜயசாந்தி போல், பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம், த்ரிஷாவுக்கு.