‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'வேதா' என்ற படத்தை தயரித்த வாசு பாஸ்கர், மறுபடியும் ஒரு காதல் என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. அதனால் நஷ்டமடைந்த வாசுபாஸ்கர், தற்போது தன்னுடைய பெயரை வாசுதேவ் பாஸ்கர் என்று மாற்றிக் கொண்டு,'பள்ளிப் பருவத்திலே' என்ற படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார்.
இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், காதல் கசக்குதய்யா படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ள வெண்பா கதாநாயகியாக நடிக்கிறர். இந்த படம் தயாரிப்பில் இருக்கும் நிலைலேயே பள்ளிப்பருவத்திலே படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை வாங்கி இருக்கிறது பிரபல டிவி நிறுவனம்! இந்த தகவலை இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்!
வழக்கமாக முன்னணி நட்சத்திரங்கள், முன்னணி இயக்குநர்களின் படங்களை மட்டுமே வாங்கும் அந்த டிவி., நிறுவனம், முதன்முறையாக முற்றிலும் புதுமுகங்கள் நடித்த பள்ளிப்பருவத்திலே படத்தை வாங்கியிருப்பது திரையுலகில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இது இப்படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.