‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பர்மா மற்றும் ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன், அடுத்தப்படியாக மெட்ரோ ஷிரிஷை வைத்து இயக்கி உள்ள படம் ‛ராஜா ரங்குஸ்கி. சிரிஷ் ஜோடியாக வில் அம்பு புகழ் சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்தனர். தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடக்கிறது.
‛‛ராஜா ரங்குஸ்கி, எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தந்திருக்கிறது. என்னுடைய அடுத்த படம் பற்றிய தகவல் ஏப்ரலில் வெளியாகும். ராஜா ரங்குஸ்கி படத்திற்கு பக்கபலமாய் இருந்த இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிரிஷ்.
ராஜா ரங்குஸ்கி படத்தை சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள், யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.