போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ்த் திரையுலகில் வெளிவந்த குறிப்பிடத்தக்கப் படங்களில் 1991ம் ஆண்டு வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே, சின்ன தம்பி' ஆகிய இரண்டு படங்கள் மிக முக்கியமான படங்கள். இரண்டு படங்களுமே 1991ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளிவந்த படங்கள். இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்ற படங்கள்.
'என் ராசாவின் மனசிலே' படம் தான் ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் படம். வினியோகஸ்தராக இருந்து நாயகனாக உயர்ந்த ராஜ்கிரணைப் பார்த்து அப்போது அனைவருமே ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவரெல்லாம் நாயகனாக நடித்தால் யார் வந்து படம் பார்ப்பார்கள் என்று கூட ஏளனம் செய்தார்கள். அன்று நாயகனாக அறிமுகமானவர் 26 வருடங்களுக்குப் பிறகும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை ஏளனம் செய்தவர்கள் இன்று காணாமல் போயிருப்பார்கள்.
பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த 'சின்ன தம்பி' படம் சரித்திர சாதனை படைத்த ஒரு படம். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக்காகி வெற்றி பெற்ற படம். தமிழில் சின்னச் சின்ன ஊர்களில் கூட 100 நாட்களைக் கடந்து ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்ற ஒரு படம். 26 வருடங்களுக்கும் மேலாக பி. வாசு இன்னமும் படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படி 26 வருடங்களுக்கு முன்பு போட்டியிட்ட ராஜ்கிரண், பி. வாசு இப்போது மீண்டும் போட்டியிட உள்ளார்கள். ராஜ்கிரண் நாயகனாக நடிக்க தனுஷ் இயக்கியுள்ள 'ப.பாண்டி' படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. அதே தினத்தில் பி. வாசு இயக்கியுள்ள 'சிவலிங்கா' படம் வெளியாக உள்ளது. 26 வருடங்கள் கழித்தும் தாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் தனி முத்திரை பதித்த இருவர் மீண்டும் அப்படிப்பட்ட வெற்றியைப் படைக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.