அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
இந்தியத் திரையுலகில் பல புதிய தொழில்நுட்பங்களை 'பாகுபலி' குழுவினர் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், நாளை இப்படத்தின் இசை வெளியீடு ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை முதல் முறையாக 360 டிகிரி கோணத்தில், 4 கே-வில் இணையதளங்கள் மூலம் மாலை 6.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள். இத்தகவலை இயக்குநர் ராஜமெளலி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவையே வியக்க வைத்த பாகுபலி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உலகளவில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் உலகின் டாப்-10 டிரைலர்களிலும் இடம்பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள பாகுபலி-2 படம் வருகிற ஏப்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.