போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கே.ஈ.ஞானவேல்ராஜாவின் 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் தயாரிப்பில், நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படம் - 'தானா சேர்ந்த கூட்டம்'.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்ததும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை துவக்க திட்டமிட்டுள்ளனர்.இதற்கிடையில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிடும் திட்டத்தில் அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தில் ரேவதியின் முன்னாள் கணவரான சுரேஷ் மேனன் வில்லனாக நடிக்கிறார்.அக்ஷய்குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் கதையை சுட்டு தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ்சிவன் இயக்கி வருவதாக ஒரு தகவல் பரவிவருகிறது.
ஸ்பெஷல் 26 படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி வைத்திருக்கும் நடிகர் தியாகராஜன் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.தான் உரிமம் பெற்ற கதையை தனக்கு தெரியாமல் விக்னேஷ்சிவன் படமாக்கி வருவதை உறுதி செய்த பின் வழக்கு தொடர இருக்கிறாராம்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருபவர்களும் கூட இது ஸ்பெஷல் 26 படத்தின் கதைதான் என்று உறுதியாக சொல்கின்றனர். இதன் காரணமாக தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.