ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். சமீபகாலமாக ஊர் ஊராக சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சிரஞ்சீவி, பிரபுதேவா, அல்லு அரவிந்த், அல்லு அர்ஜுன், ராகுல் ப்ரீத், லாவண்யா திரிபாதி, நாக சைதன்யா... என ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் பிரபலப்படுத்தினர்.
இந்நிலையில், அமெரிக்கா இசை பயணத்தை தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களில், மேலும் ஒரு பிரம்மாண்ட இசை பயணத்தை நடத்த இருக்கிறார். வருகின்ற மே மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை இந்த இசை பயணம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை ஆஸ்திரேலியாவில் உள்ள கே.கே.புரொடக்ஷன்ஸ் நடத்துகின்றனர்.