போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் சினிமா ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு சென்று கொண்டிருக்கிறது. 2.ஓ, பாகுபலி படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவை வடிமைத்து நமக்கு கொடுத்தவரும் ஒரு ஹாலிவுட் இயக்குனர் தான். நாடகத்தை அப்படியே படம் பிடித்து திரையிட்டுக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில். குளோஷ் ஷாட், லாங் ஷாட், டிராலி ஷாட் என்று காட்சி மொழியை அறிமுகப்படுத்தினார். பக்கம் பக்கமாக வசனம் பேசி கொண்டிருந்த தமிழ் சினிமாவை காட்சி மொழிக்கு கொண்டு வந்தார். தமிழ் கலாச்சரத்தை கெடுக்க வந்த அந்நியன் என்றுதான் தமிழ்நாடு அவருக்கு பட்டம் கொடுத்தது. அவர்தான் தமிழ் சினிமாவின் முதல் கமர்ஷியல் இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன்.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் பார்ட்டன் நகரில் 1909ம் ஆண்டு பிறந்தவர் எல்லீஸ் ஆர்.டங்கள். பள்ளிப் பருவம் முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த டங்கன், ஹாலிவுட் சினிமாவின் பிறப்பிடமான கலிபோர்னியாவுக்கு சென்று, திரைப்பட ஒளிப்பதிவுக் கலையைப் ஒரு பாடமாகப் பயின்றார். ஒளிப்பதிவுடன் நின்றுவிடாமல் ஒரு திரைப்படம் உருவாகும் எல்லாத் துறைகளையும் விருப்பத்துடன் கற்றுக்கொண்டார். படிப்பு முடிந்ததும் டாண்டன் தன் தந்தை பணியாற்றிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு திரும்பினார். அப்போது பெரும்பாலான தமிழ்ப் படங்கள் பம்பாயிலும் கோல்கட்டாவிலும் தயாராகி வந்தன.
'நந்தனார்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிவர் 1936ம் ஆண்டு அதன் பிறகு 'சதி லீலாவதி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு சீமந்தினி, இரு சகோதரர்கள், அம்பிகாபதி, சகுந்தலா, காளமேகம், தாசி பெண், வால்மீகி, மீரா, பொன்முடி, மந்திரி குமாரி படங்களை இயக்கினார். அதன் பிறகு ஹாலிவுட்டுக்கு திரும்பிச் சென்ற டங்கன், அங்கு ரிட்டர்னிங் ஷோல்ஜர் உள்பட பல ஹாலிவுட் படங்களை இயக்கினார்.