இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? |
தமிழ் சினிமாவை சர்வதேசப் பார்வைக்குக் கொண்டு சென்றவர்களில் இயக்குனர் மணிரத்னமும் முக்கியமானவர். தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் இந்திய அளவிலும், உலக அளவிலும் தனக்கென ஒரு தனி இடத்தைத் தொடர்ந்து பல ஆண்டு காலமாக தக்க வைத்துக் கொண்டிருப்பவர். தோல்விகளைக் கொடுத்தாலும் அடுத்து எப்படியாவது நிமிர்ந்துவிடுவார்.
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 7ம் தேதி வெளியிட உள்ளளார்கள். ஏற்கெனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் தனித் தனியாக வெளியிடப்பட்ட மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. நாளை(மார்ச் 9) மாலை 5 மணிக்கு படக்குழுவினருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஃபேஸ்புக் லைவ் மூலம் 'காற்று வெளியிடை' படத்தின் டிரைலரை வெளியிட உள்ளார். இதை ஏஆர் ரஹ்மானே வீடியோ வடிவில் தெரிவித்திருக்கிறார்.
கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் மணிரத்னத்தின் அடுத்த ஹிட் படமென இப்போதே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதை படத்தின் பாடல்களும் நிரூபித்துள்ளன. காலத்திற்கேற்ப என்றும் இளமையுடன் இளம் ரசிகர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு படங்களைத் தருவதில் மணிரத்னத்திற்கு நிகர் அவரேதான் என திரையுலகினரே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
'காற்று வெளியிடை' டிரைலர் எப்படியிருக்கப்போகிறது என்பதைப் பார்க்க இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டும்.