பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
டோரண்டா ரீல்ஸ் நிறுவனம், ரேயான் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் என்னோட விளையாடு. ஸ்ரீதர் கிருஷ்ணசாமி, நரேன் கந்தசாமி தயாரிப்பாளர்கள். பரத், சாந்தினி, கதிர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, யோக்ஜேபி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், மோசஸ் இசை அமைத்துள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி பரத் கூறியதாவது:
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரப்போகும் எனது படம் இது. 9 மாதங்கள் வரை கையில் படமே இல்லை. வந்த சில படங்களையும் மறுத்து எனக்கு நானே பிரேக் எடுத்துக் கொண்டேன். சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. இப்படி ஒரு சூழ்நிலையை நான் சந்தித்தது இல்லை. புதுமுக இயக்குனர்களை நம்பி சில படங்களில் நடித்தேன். கதை சொல்ல தெரிந்த அளவிற்கு அவர்களால் படம் இயக்கத் தெரியவில்லை. இதனால் பல தோல்விகள். அந்த நேரத்தில் சரியான கதையோடு, சரியான இயக்குனரோடு வந்த படம் என்னோடு விளையாடு.
பல சிரமங்களுக்கு இடையே படம் இப்போது முடிந்திருக்கிறது. ஒரு படம் முதல் ஷோவிலேயே பேசப்பட வேண்டும். முதல் வாரத்தில் வசூலிக்க வேண்டும். இரண்டு வாரம் ஓட வேண்டும் அதுதான் இப்போதைய நிலை. லாஜிக்கூட பார்க்கத் தேவையில்லை. மக்களை படம் சுவாரஸ்யப்படுத்தினால் போதும் என்பதுதான் இன்றைய நிலை. இரண்டு நாயகர்கள் படத்தில் நடிப்பது எனக்கு புதிதில்லை. இதற்கு முன் ஆர்யாவுடன் பட்டியல், விஷாலுடன் செல்லமே படங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில கதிருடன் நடித்திருக்கிறேன். சூதாடுவது தவறானது. குடும்பத்துக்கு கேடானது என்கிற மேசேஜ் சொல்கிற படம் இது. என்றார் பரத்.