‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விந்தை, கமரக்கட்டு படங்களில் நாயகியாக நடித்தவர் மனீஷாஜித். தற்போது தனது பெயரை ரெஹானா என்று மாற்றியுள்ள அவர், திமில், அப்பாத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் நடித்துள்ள சில படங்கள் எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை. அதனால் பெரிய நடிகர்களின் படங்களில் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் ரெஹானா.
இந்தநிலையில், செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி-ரித்திகா சிங் நடிக்கும் படத்தில் ரித்திகாசிங்கின் தங்கையாக நடிக்க ஒருவாய்ப்பு ரெஹானாவை தேடிச்சென்றிருக்கிறது. பெரிய படம் என்றதும் அந்த கம்பெனிக்கு சென்று கதை கேட்ட அவர், தனக்கு குறைவான காட்சிகள் இருப்பதால், இந்த மாதிரி சிறிய வேடத்தில் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டாராம். அதனால் பிப்ரவரி 10-ந்தேதி வணங்காமுடி படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், ரித்திகாசிங்கிற்கு தங்கையாக நடிக்க அவசரகதியில் நடிகை தேடி வருகிறார்கள்.