போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி' படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்தது. அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படம் 'காற்று வெளியிடை'. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க இருந்தார். அவர் போட்ட கண்டிஷன் காரணமாக தற்போது அதிதி ராவ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் கூட்டணி என்றாலே அப்படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட்டாகும் என்பது கடந்த கால வரலாறு. அதனால் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் கூட்டணி இணையும் அந்த ஆல்பத்தை வெளியிடும் ஆடியோ ரைட்ஸ்க்கான போட்டியும் இருக்கும்! அந்த வகையில் 'காற்று வெளியிடை' படத்தின் பாடல்கள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதை உணர்ந்து பெரிய விலை கொடுத்து இப்படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது சோனி நிறுவனம். 'காற்று வெளியிடை' படப் பாடல்கள் விரைவில் சோனி நிறுவனத்தின் வெளியீடாக வரவிருக்கிறது. மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவன தயாரிப்பான இப்படம் மார்ச் மாதம் வெளியாகிறது.