ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் 'சிவலிங்கா'. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'சிவலிங்கா' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தில், ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்தள்ளார். ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங்குடன் பி.வாசுவின் மகன் ஷக்தி வாசு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் கொலை செய்யப்படும் இவர் படம் முழுக்க ஆவியாக வந்து மிரட்டுவதுதான் கதை. இப்படத்தின் ஒளிப்பதிவை சர்வேஷ் முராரி கவனித்திருக்க. எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி பொங்கல் அன்று ரிலீசாகவிருந்த சிவலிங்கா படத்தை ஒருவாரம் தள்ளி வைத்து ஜனவரி 26 அன்று வெளியிட முடிவு செய்திருந்தனர். அதற்காக சில தினங்களுக்கு முன் சென்சாருக்கு அனுப்பப்பட்டது சிவலிங்கா.
படத்தைப் பார்த்த சென்சார் யு சான்றிதழ் வழங்கியது. சென்சார் முடிந்த கையோடு சிவலிங்காவுக்கு தியேட்டர்கள் புக் பண்ணத் தொடங்கியவர்கள் தற்போது அந்தப் பணியை நிறுத்திவிட்டனர். காரணம் சிவலிங்கா படம் ஜனவரி 26 அன்று வெளிவரவில்லையாம். தற்போது மாணவர்களின் எழுச்சி காரணமாக தியேட்டர்களில் கூட்டமில்லை. எனவே இப்போது படத்தை ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம் தயாரிப்பாளர்.