ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சூர்யா நடிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமைய்யா, சரண்யா, ஆனந்தராஜ், செந்தில் என பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக, நானும் ரெளடிதான் ஹிட்டுக்குப்பிறகு சூர்யாவின் கால்சீட் டுக்காக வெயிட் பண்ணி காலதாமதம் செய்து விட்டதால் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட வேண்டும் என்று படப்பிடிப்பை வேகமாக நடத்திக்கொண்டிருக்கிறார் விக்னேஷ்சிவன்.
மேலும், ஜனவரி 26-ந்தேதி ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம்-3 படம் திரைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த படத்தின் டீசர் வெளியாகி விடும் என்கிறார்கள். சூர்யாவைப் பொறுத்தவரை சிங்கம்-3 வெளியீடு வேலைகளில் பரபரப்பாகி விட்டார். அதனால் இந்த கேப்பில் தானா சேர்ந்த கூட்டம் டீசரை ரெடி பண்ணி வரும் விக்னேஷ்சிவன், சிங்கம்-3 திரைக்கு வருவதற்கு முன்பே தானா சேர்ந்த கூட்டம் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.