‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து பிறகு கைவிடப்பட்ட 'துருவநட்சத்திரம்' படத்தில் தற்போது விக்ரம் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து அதிகாரபூர்வமாக கடந்த 8-ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். தொடர்ந்து தினமும் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மணிரதனத்தின் 'காற்று வெளியிடை' பட ஹீரோயின் அதிதி ராவ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை அனு இமானுவேல் நடிக்கவிருப்பதை 'துருவநட்சத்திரம்' போஸ்டர்கள் மூலம் உறுதிசெய்துவிட்டனர். விக்ரமுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கும் அனு இமானுவேல் யார்?
நிவின் பாலி நடித்த 'ஆக்ஷன் ஹீரோ பிஜு' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர். மஞ்சிமா மோகனைப்போலவே சில மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர். வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள 'துருவநட்சத்திரம்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். அது சரி... துருவ நட்சத்திரம் படத்தில் அதிதி ராவ் ஏன் நடிக்கவில்லை? 'காற்று வெளியிடை' படம் வெளியாகும்வரை வேறுபடங்களில் நடிக்கக் கூடாது என்று அவரிடம் மணிரத்னம் அக்ரிமெண்ட் போட்டிருக்கிறாராம்.