ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி, துல்கர்சல்மான் நடித்த வாயை மூடி பேசவும், தனுஷ் நடித்த மாரி ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இதில், மாரி படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும், தனுசுக்கு மிகவும் பிடித்தமான படமானது. அதனால் அந்த படம் வெளியானதும் மாரி-2 படத்திற்கான கதையை ரெடி பண்ணுமாறு பாலாஜி மோகனிடத்தில் சொன்னார். அதை யடுத்து அப்படத்திற்கான கதையை ரெடி பண்ணிவிட்ட அவர், தனுஷின் கால்சீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தனுஷை பாலாஜிமோகன் சந்தித்தபோது இன்னும் சில மாதங்களில் மாரி-2வை தொடங்கிவிடலாம் என்று கூறியிருக்கிறாராம். தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா, பவர்பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2 படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ், இந்த படங்களை முடித்ததும் மாரி-2 படத்தில் நடிக்கிறாராம். மேலும், இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த வில்லன்கள் இல்லாமல், இந்தி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. ஆனால், கதாநாயகி மாரியில் நடித்த காஜல்அகர்வால்தான் நடிக்கிறாராம்.