ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி பிரியா. கவுரவம், சுட்டகதை, கள்ளப்படம், யாகாவாராயினும் நாகாக்க, மாயா, களம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்துள்ள லட்சுமி என்ற குறும்படம் சர்தேச படவிழாக்களில் விருகளை குவித்து வருகிறது. உலக நாடுகளில் நடந்த பட விழாக்களில் இதுவரை10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படத்தை கே.எம்.சர்ஜன் இயக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
கணவன், மகன் என குடுமபத்திற்காக ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண்ணுக்கு, சராசரியாக தன் கணவனிடத்தில் இருந்து கிடைக்கும் காதல், பாசம், அன்பு என இவை எதுவும் கிடைக்காமல் போகிறது. வாழ்க்கையே வெறுத்து போகும் அந்த சூழ்நிலையில், லக்ஷ்மியின் மனம் காதலை தேடுகிறது. அவளது மனம் சொல்லும் பாணியில் லக்ஷ்மி பயணிக்கிறாளா? அல்லது சமூதாயம் காட்டும் பாதையில் பயணிக்கிறாளா? என்பது தான் கதை.