மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு |
பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தை தயாரித்த பட நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. என்றாலும் அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தைப்போலவே மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருந்த ஆர். பார்த்திபன் க்ரவுட்ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கியிருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. இந்தப்படத்தில் தனது குருநாதர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை கதாநாயகனாக்கியிருக்கிறார் பார்த்திபன். சாந்தனுவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.
இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என பார்த்திபன் முதலில் அறிவித்தார். பின்னர் டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில், 'பொங்கலுக்கு விஜயம் செய்கிறோம்' என்ற வாசகங்களுடன் கூடிய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பைரவா வெளியாகும் ஜனவரி 12 ஆம் தேதி அன்றே 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொங்கலுக்கு 'பைரவா' படத்துடன் ஏற்கெனவே 6 படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன.
இந்நிலையில் இப்போது பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் வெளிவராது என்றும் போதிய தியேட்டர்கள் கிடைக்காமல்போய் கடைசி நேரத்தில் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப்போகும் என்ற தகவல் அடிபடுகிறது.