‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால், நடிக்க ஆவலாக இருப்பதாக, ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா, சசிகலா என்ற பெயரில் படம் எடுக்கப் போவதாக அறிவித்து உள்ளார். இதையடுத்து, ஜெ., வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால், பொருத்தமான நடிகை யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. அதற்கு, படையப்பா படத்தில், நீலாம்பரியாக நடித்த, ரம்யா கிருஷ்ணன் தான் சரியான தேர்வு என்கின்றனர்; ஜெ., கெட் அப்பில் ரம்யாவை சித்தரித்து, சமூக வலைதளங்களில் படமும் வெளியிட்டு உள்ளனர்.
மேலும், நடிகையருக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை, தேர்ந்தெடுத்து நடித்து வரும், நயன்தாரா, த்ரிஷா போன்றோரும், ஜெயலலிதாவாக நடித்தால் நன்றாக இருக்கும் என, சமூக வலைதளங்களில், கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இதற்கிடையில், ஜெ., வேடத்தில் நடிக்க பொருத்தமானவர், ரம்யா கிருஷ்ணனா, நயன்தாராவா, த்ரிஷாவா என, சில தரப்பில், ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டு வருகிறது.