போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சூர்யாவுக்கு ஆந்திராவில் கணிசமான ரசிகர்கள் இருப்பதைப்போன்று, கேரளாவில் விஜய்க்கு சிலை வைக்கிற அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சுமாராக போகும் விஜய் படங்கள் கூட கேரளாவில் சூப்பராக போகும். விஜய், மோகன்லாலுடன் நடித்த ஜில்லா படத்தை மோகன்லாலே வாங்கி வெளியிட்டார். 3 கோடி அவருக்கு லாபம் கிடைத்தது. தெறி படத்தில் மோகன்லால் 4 கோடி சம்பாதித்தார். அந்த வரிசையில் விஜய் தற்போது நடித்து வரும் பைரவா படத்தின் கேரள உரிமம் 7 கோடியே 30 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கேரளாவில் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
பைரவா படத்தை பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன் தயாரித்துள்ளது. பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி தயாரிப்பாளர்கள். கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமய்யா, சரத் லோகித்தாஸ், ஸ்ரீமன், மைம்கோபி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கி உள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங், பணிகள் நடந்து வருகிறது.