ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஜெயலலிதா மறைவால் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் 66வது பிறந்த நாள் வருகிற 12ந் தேதி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரஜினி முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பாக ரஜினியின் அனைத்து ரசிகர்கள் மன்றத்திற்கும் போன் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் போஸ்டர், பேனர், தோரணம் உள்ளிட்ட எந்த கொண்டாட்டமும் கூடாது என்று ரஜினி தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிறந்தநாளின்போது தனது இல்லத்தில் ரசிகர்களை சந்திக்கும் ரஜினி, இந்தாண்டு அதையும் தவிர்த்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையில் தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் அறிவுறுத்தியது நினைவிருக்கலாம்.