ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
1993ம் ஆண்டு... அப்போது விநியோகஸ்தர்கள் சங்கம் பவர்புல்லாக இருந்தது. சங்கம் நினைத்தால் எந்த படத்தையும் தடுக்க முடியும், எந்த நடிகரையும் நடிக்கவிடாமல் செய்ய முடியும். அந்த நேரத்தில் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறி வேலை நிறுத்தம் அறிவித்தது விநியோகஸ்தர்கள் சங்கம். இதனால் எந்த நடிகரும் சம்பளத்தை குறைக்க முன்வரவில்லை. எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை. ஒரே ஒரு படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடந்தது. அது ரஜினி நடித்த உழைப்பாளி.
"என் உழைப்புக்கான சம்பளத்தை நான்தான் நிர்ணயிப்பேன். இவர்கள் யார் அதை நிர்ணயம் செய்வதற்கு?" என்று ரஜினி கேள்வி எழுப்பினார். படத்தை நிறுத்த பல முயற்சிகள் நடந்தது. ஆனால் 58 நாளில் படத்தை முடித்தார் ரஜினி. விநியோகஸ்தர்கள் சங்கம் ரஜினிக்கு ரெட்கார்ட் போட்டது. படத்தை வெளியிட தியேட்டர்களுக்கு தடைபோட்டது. ஆனால் ரஜினி "என் பின்னால் வருகிறவர்கள் வாருங்கள்" என அழைத்தார். சில தியேட்டர் அதிபர்கள் வந்தார்கள். அவர்கள் மூலம் படத்தை வெளியிட்டார். படம் 100 நாட்கள் ஓடியது. மதுரையில் 150 நாள் ஓடியது. பின்னர் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டது சங்கம். பிரச்சினை சுமூகமாக தீர்ந்தது.
உழைப்பாளி படத்தில் ரஜினியுடன் ரோஜா, ஸ்ரீவித்யா, சுஜாதா, ராதாரவி, நிழல்கள்ரவி, எஸ்எஸ் சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் விஜயா கம்பைன்ஸ் சார்பில் வெங்கட்ராம ரெட்டி தயாரித்திருந்தார். பி.வாசு இயக்கி இருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.