நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
அதர்வாவுக்கு வெற்றிப்படமாக அமைந்த 'ஈட்டி' படத்தை இயக்கியவர் ரவி அரசு. ஈட்டி படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் அடிபட்டது. லேட்டஸ்ட்டாக கிடைத்த புதிய தகவலின் படி ரவி அரசுவின் அடுத்தப்படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார் இல்லை.
அவரை வைத்து இயக்குவதற்கு முன்னதாக விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க கமிட்டாகியுள்ளாராம் ரவி அரசு. இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ஆக்ஷனும் சென்ட்டிமெண்ட்டும் கலந்த படமாக ஈட்டி படத்தை இயக்கிய ரவிஅரசு, விஜய்சேதுபதிக்காக உருவாக்கியிருப்பது விறுவிறுப்பான ஒரு ஆக்ஷன் கதை!
றெக்க படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள விஜய்சேதுபதியை இன்னும் வலுவான ஆக்ஷன் ஹீரோவக்கும் வகையில் கதையை தயார் பண்ணி இருக்கிறாராம் ரவி அரசு. இந்தப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படத்தை முடித்த பிறகே ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் பட வேலைகளை துவங்குவதாக திட்டமிட்டிருக்கிறார் ரவிஅரசு.