போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரஜினி-மம்மூட்டி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதன்பிறகு ரோஜா படத்தில் நாயகனாக நடித்த அவர், பம்பாய், இந்திரா என பல படங்களில் நடித்தவர் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டே விலகியிருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின்னர் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தார். அந்த படம் அவருக்கு நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுக்க, இப்போது மீண்டும் ஜெயம்ரவியுடன் இணைந்து போகன் படத்தில் நடித்திருப்பவர், சதுரங்க வேட்டை-2வில் திரிஷாவுடன் இணைந்து நடிக்கிறார். ஆக, மறுபடியும் பிசியாகிறார் அரவிந்த்சாமி.
ஆனால், தனி ஒருவனில் வில்லனாக நடித்தவர் போகனிலும் எதிரும் புதிருமான வேடத்தில்தான் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சதுரங்க வேட்டை-2வில் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆனால் இந்த படங்களைத் தொடர்ந்து சில டைரக்டர்களிடம் அவர் மறுபடியும் டூயட் பாடும் கதாநாயகனாக உருவெடுக்க கதை கேட்டுள்ளார். அதனால் அரவிந்த்சாமியை விரைவில் ரொமான்டிக் நாயகனாக பார்க்கலாம் என்கிறார்கள். ஆனால், தற்போதைய நிலவரப்படி அவர் முன்பைவிட அதிகமாக வெயிட் போட்டிருப்பதால் இப்போது உடல் எடையை கணிசமான அளவு குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அரவிந்த்சாமி.