ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கமல்ஹாசனுடன் 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா குமார். உத்தமவில்லன் படத்தின் புரமோஷனின்போது கமல் செல்லுமிடமெல்லாம் பூஜாகுமாரும் சென்றார். அதை வைத்து கமல், கௌதமியை பிரிக்கும் உத்தமவில்லி இவர்தான் போலிருக்கிறது என்று திரையுலகில் பலரும் கமெண்ட் அடித்தனர். இது போன்ற கமெண்ட்ஸ் பூஜாகுமாரின் காதுக்கும் சென்றதோ என்னவோ கமல்ஹாசனைவிட்டு வெகு தூரம் விலகிப்போனார்.
இந்நிலையில் பூஜா குமார் பற்றி ஒரு செய்தி. பிரபு நடிக்கும் 'மீன் குழம்பும் மண் பானையும்' படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் பூஜா குமார். சுசீந்திரனின் உதவியாளரான அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கதில் காளிதாஸ் ஜெயராம், அஷ்னா சவேரி கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் காளிதாஸின் அப்பாவாக பிரபு நடித்திருக்கிறார்.
முழுக்க முழுக்க மலேசியாவில் படமாகியுள்ள இப்படத்தில் ஹோட்டல் முதலாளியாக பிரபு நடித்திருக்கிறார். மலேசியாவைச் சேர்ந்த டான் ஆக மலாக்கா என்ற அதிரடியான கேரக்டரில் நடித்துள்ளார் பூஜா குமார். படம் முழுக்க டெரர் ஆக வலம் வருகிற வித்தியாசமான வில்லியாக பட்டையைக் கிளப்பியுள்ளாராம். 'இஷான் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சார்பில் துஷ்யந்த் ராம்குமார் தயாரித்துள்ள 'மீன் குழம்பும் மண் பானையும்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் கமல்ஹாசன்.
அப்ப பூஜா குமாருக்கு கமல் சிபாரிசு செய்தாரா?