மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதி, தயாரித்த படம் குரு சிஷ்யன். இந்தப் படத்தில்தான் கவுதமி அறிமுகமானார். இன்னொரு ஜோடியாக பிரபுவும் சீதாவும் நடித்தார்கள். ரவிச்சந்திரன், ராதாரவி, சோ, பாண்டியன், வினு சக்ரவர்த்தி என பலர் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
ரஜினிக்கு எப்போதுமே நடிகர் திலகம் சிவாஜி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தனி மரியாதை உண்டு. அதனால்தான் சந்திரமுகியில் நடித்துக் கொடுத்த அந்த குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பெரிய உதவி செய்தார்.
குரு சிஷ்யன் படத்தில் ரஜினி குரு, பிரபு சிஷ்யன். கதைப்படி, ஒருகாட்சியில் பிரபுவுக்கு சண்டை காட்சி எதுவும் இல்லை. ஆனால் ரஜினி, பிரபுவுக்கு ஒரு சண்டை காட்சி வைக்கச் சொன்னார். அதற்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கதையில் அதற்கு இடமில்லையே என்றார். எனது சண்டை காட்சி ஒன்றை பிரபுவுக்கு கொடுங்கள், கடைசி நேரத்தில் நான் சண்டையில் என்ட்ரி கொடுக்கிறேன். கதைக்கு சரியாக வரும் என்றார். எஸ்.பி.முத்துராமனும் அப்படியே செய்தார்.
படத்திற்கு ரஜினி 23 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு மைசூரில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சீதா பிசியான நடிகையாக இருந்ததால் அவர் கால்ஷீட் கிடைப்பது பிரச்னையாக இருந்தது. இடையில் சீதாவின் 2 நாள் கால்ஷீட் கிடைத்தது. ரஜினிக்கு ஒதுக்கிய நாளில் பிரபு, சீதா பாடல் காட்சியை படம்பிடிக்க முடிவு செய்தார் எஸ்.பி.முத்துராமன், விஷயத்தை ரஜினியிடம் சொல்லி "இரண்டு நாள் ஓய்வெடுங்கள், அல்லது சென்னை சென்று வாருங்கள், இந்த இரண்டு நாளும் நீங்கள் நடித்ததாக கால்ஷீட் கணக்கில் வைத்துக் கொள்கிறோம்" என்றார். ரஜினியும் ஒப்புக் கொண்டார்.
மறுநாள் மைசூர் அரண்மனையில் பிரபு, சீதா பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடல் காட்சிக்கு புதிதாக ஒருவர் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு டிராலி தள்ளிக்கொண்டிருந்தார். "யாருப்பா அது புதுசா இருக்கு" என்று எஸ்.பி.முத்துராமன் அருகில் சென்று விசாரித்தார். மப்ளரை கழட்டினால்... ரஜினி.
"என்ன ரஜினி நீங்க இப்படி...?" என்றார் அதிர்ச்சியுடன். "சார் நான் வேலை பார்க்காவிட்டாலும் இன்னிக்கு நீங்க எனக்கு சம்பளம் தர்றீங்க. ஆனால் என்னால் வேலை செய்யாமல் சம்பளம் வாங்க முடியாது. இதுவும் ஒரு வேலைதானே. அதை செய்ய விடுங்கள்" என்றார். இரண்டு நாளும் படப்பிடிப்புக்கு தேவையான உதவி வேலைகளை செய்தார் ரஜினி.