தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
கும்கி படத்தில் நடித்தபோது லட்சுமிமேனனுக்கு 14 வயது. ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். கதைப்படி அந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருந்தார் லட்சுமிமேனன். அப்படி அவர் நடித்த முதல் படமே ஹிட்ட டித்ததால் அடுத்தடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் என பல ஹிட் படங்களில் நடித் தார். லட்சுமிமேனன் நடித்தால் படம் வெற்றி பெற்று விடும் என்கிற சென்டி மென்ட்டும் கோலிவுட்டில் நிலவியது.
ஆனால், மிருதன் படத்திற்கு பிறகு விஜயசேதுபதியுடன் நடித்த றெக்க படத்தில் முன்பு பார்த்த லட்சுமிமேனனை விடவும் சதை போட்டு புசுபுசுவென்று பெருத்துப்போயிருந்தார் அவர். விளைவு, லட்சுமிமேனனிடம், ஏற்கனவே கதை சொல்லிவிட்டு தயாரிப்பாளர் தேடிக்கொண்டிருந்த சில டைரக்டர்கள் அவருக்கு போன் போட்டு, ஒரே படத்தில் இப்படி பெருத்து விட்டீர்களே என்று தங்களது அதிர்ச்சியை மனநிலையை வெளிப்படுத்த ஆடிப்போய் விட்டாராம் லட்சுமிமேனன். அதனால் வெயிட் போட்டதை காரணம் காட்டி டோட்டல் கோலிவுட்டும் தன்னை ஓரங்கட்டி விடக்கூடாது என்பதற்காக, இதுவரை டயட்ஸ் பற்றி துளியும் யோசிக்காமல் இருந்து வந்த லட்சுமிமேனன், இப்போது தீவிர டயட்ஸ் கடைபிடித்து வெயிட்டை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.