‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ரம். ரிஷி, சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத், அர்ஜூன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய் பரத் இயக்கியுள்ளார். விஜயராகவேந்திரா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில்,
ரம் எனது 13-வது படம். ஹாரர் படம். என் லைபில் நான் பேய் படங்களே பார்த்ததில்லை. காரணம். பேய் படங்கள் என்றாலே நான் ரொம்ப பயப்படுவேன்.கடைசியாக, சின்ன வயதில் மைடியர் குட்டிச்சத்தான் பார்த்தேன். அதுக்குஅப்புறம் எந்த ஹாரர் படமும் பார்த்ததில்லை.
மேலும், வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு ரிஷி இந்த படம் பற்றி என்னிடம் பேசினார். முதலில் ரம் என்று சொன்னதும் நார்மலா பேசிய நான், ஹாரர் படம் என்றதும் பயந்து விட்டேன். என்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுசாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் இந்த படத்திற்கும் ஒரு புது ஆல்பத்தை கொடுத்திருக்கிறேன். இந்த படத்தின் டீம் எனர்ஜிடிக்காக இருந்ததால் நானும் அதிக எனர்ஜியுடன் ஒர்க் பண்ணினேன்.
இந்த இடத்தில் பிரஸ்க்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். படத்துக்கு படம் எனது இசையைப்பற்றி நன்றாக எழுதி, என்னை உசரத்தில் தூக்கி வைத்து விட்டனர். என்னால் யோசித்தே பார்க்க முடியவில்லை. ஒய்திஸ்கொலவெறி படம் ரிலீசானபோது விவேக் என்னை முதல்நபராக போன் செய்து பாராட்டினார். அவர் இந்த படத்திலும் நடித்திருப்பது எனக்கு சந்தோசமாக உள்ளது. அதோடு, பேய் படம் என்றாலே பார்க்க பயப்படும் நான், இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும்போது போர்வை, தலையணையால் போர்த்திக்கொண்டபடி பார்த்தேன். அப்படியொரு பயம். ஆனாலும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறேன்.
ரெமோவில் எனக்கு பாடல் எழுதிய விவேக் இந்த படத்திலும் எழுதியிருக்கிறார். பாடலாசிரியர்கள் எனக்கு செட்டாவது ரொம்ப கஷ்டம். ஆனால் விவேக் நன்றாக செட்டாகி விட்டார். கார்க்கி எழுதிய கோலா பாடல் இணையதளத்தில் வெளியாகி ஹிட்டாகி விட்டது. எனக்கு மீடியா சப்போட் செய்ததை விட எக்ஸ்ட்ராவாக இந்த படத்தின் நாயகனான தம்பி ரிஷிக்கு சப்போட் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.