பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |
கன்னடத்தில் "சத்யானந்தா" என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள புதிய படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமியார் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பா.ஜ.க பிரமுகர் என்று பன்முகம் கொண்ட மதன் பட்டேல் கன்னடத்தில் "சத்யானந்தா" என்ற பெயரில் புதிய படத்தை எடுத்திருக்கிறார். சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் இந்நேரத்தில், இந்த படத்தை வெளியிட கூடாது என்றும், இது தனது பெயரையும் புகழையும் சீர் குலைவு செய்யும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றும் கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ரஞ்சிதா புகழ் சாமியாரான நித்யானந்தா. மேலும் மதன் பட்டேல் மீது மூன்று கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கும் போடப்பட்டுள்ளது.
இதுபற்றி மதன் பட்டேல் அளித்துள்ள பேட்டியில், இந்த படம் என்ன மாதிரியான படம் என்பதையே தெரிந்து கொள்ளாமல் உத்தேசமாக என் மீது வழக்கு போடுவது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை. ஆனால், நான் கடவுள் பக்தன். மாநில பா.ஜ.க வில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறேன். இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்று நினைப்பவனல்ல நான். ஆனால் இந்து மத கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்களையும், ஜோதிடர்களையும் என் படத்தில் காட்டி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது என் கடமை. அதைத்தான் சத்யானந்தாவில் செய்திருக்கிறேன். இதை வெளியிட கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் நித்தியானந்தாவுக்கு இல்லை. இந்த வழக்கை நானும் சட்டப்படி சந்திப்பேன், என்று கூறியுள்ளார்.
இப்படியொரு படத்தை எடுக்கத் தோன்றியதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் இருக்கிறது என்று கூறியிருக்கும் பட்டேல், ஒருமுறை தனது புது வீட்டு கிரஹபிரவேசத்திற்கு சில முக்கியமான சாமியார்களை அழைத்திருந்தாராம். அப்போது அங்கு வந்திருந்த சாமியார்களிடம் தனது மகள்களை ஆசிர்வாதம் வாங்க சொன்னாராம். அவர்களோ யார் ஆசிர்வாதமும் வேண்டாம். நித்தியானந்தா விவகாரத்திற்கு பிறகு எந்த காவி சாமியாரை பார்த்தாலும் எங்களுக்கு தப்பாகவே தெரிகிறது என்றார்களாம். இந்து மதமே இந்த ஒரே ஒரு சாமியரால் கறைபட்டு விட்டதே என்று கவலைப்பட்ட மதன் பட்டேல், இப்படி ஒரு படத்தை உடனே எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக பெங்களூருவில் பேசிக் கொள்கிறார்கள்.