ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
கோலிவுட்டின் ஸ்டைலிஷ் பட இயக்குனர் கௌதம் மேனன், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்பலு, திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில், காதல் கதையமசத்தில் உருவான பெல்லி சூப்பலு படத்தில் விஜய் தேவீர்கொண்டா மற்றும் ரித்து வர்மா ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற பெல்லு சூப்புலு படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை சல்மான் வாங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே தயாரிப்பாளர் வாசு ரூ 51 லட்சம் கொடுத்து பெல்லி சூப்பலு படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார். தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் கைப்பற்றியுள்ளார். அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் பிசியாக இருக்கும் கௌதம் மேனன், பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கை தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து அவரே இயக்குகின்றாரா அல்லது வேறு இயக்குனரை தேர்வு செய்கின்றாரா என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.