இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வருகிற நவம்பர் 7ந் தேதி பிறந்த நாள். இதனை ஆண்டுதோறும் அவரது ரசிகர்கள், அன்னதானம், ரத்ததானம், ஏழை குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ உதவிகள் வழங்கி கொண்டாடுவார்கள். சென்னையில் நடக்கும் விழாவில் கமல் ரசிகர்களை சந்தித்து பேசுவார். இந்த ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில்... "நற்பணி இயக்க தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வர் உடல் நலம் இவ்வாறு இருக்க என் பிறந்த நாளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்" என்று எழுதியிருக்கிறார். மேலும் முதல்வர் பூரண குணம் பெற்றுத் திரும்பவும் வாழ்த்தியிருக்கிறார்.
கமல்ஹாசன், மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்ததால் அதற்கான சிகிச்சை பெற்ற வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.